Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மேற்குக் கனடாவில் பரவும் தீயை அணைக்க நூற்றுக்கணக்கான படைவீரர்கள்

மேற்குக் கனடாவில் மூண்டுள்ள காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். 

வாசிப்புநேரம் -

மேற்குக் கனடாவில் மூண்டுள்ள காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான ராணுவப்படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் எல்லைப் பகுதியில் உள்ள அமெரிக்க மாநிலங்களிலும் காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அது கடுமையாக இருப்பதால், வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கலிஃபோர்னியா, ஆரெகன் (Oregon), மொண்டானா (Montana), நெவாடா (Nevada) ஆகியவற்றில் கடுமையான 80 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்