Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனடா: நூலகத்தில் கத்திக்குத்துத் தாக்குதல் - ஒரு பெண் கொலை, 6 பேர் காயம்

கனடா: நூலகத்தில் கத்திக்குத்துத் தாக்குதல் - ஒரு பெண் கொலை, 6 பேர் காயம்

வாசிப்புநேரம் -

கனடாவில், நூலகம் ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

நார்த் வான்கூவரில் நடத்தப்பட்ட அந்த அசம்பாவிதம் தொடர்பில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவரைத் தடுத்துவைத்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

கத்திக்குத்துக்கான நோக்கம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை.

போக்குவரத்துக்காக நின்றபோது, ரத்தக் காயத்துடன் ஒரு பெண்ணைப் பார்த்ததாக
ஸ்டீவ் மோசப் (Steve Mossop) என்பவர் கூறினர்.

பின்னர் ஓர் ஆடவர், ஒரு முதிய பெண், இளம் வயதுப் பெண் போன்ற வேறு சிலரையும் தம்முடைய நண்பருடன் அங்கு கண்டதாக மோசப் கூறினார்.

தாக்குதல் நடத்தியவரும் பின்னால் ஓடிவருவதை அவர்கள் பார்த்திருக்கின்றனர். பாதையில் யாரேனும் குறுக்கே வந்தால் அவர்களும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக கனடியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
பில் பிளேர் (Bill Blair) கூறினார். மிகுந்த வருத்தமடைந்திருப்பதாகவும், யோசிக்காமல் நடத்தப்பட்ட வன்முறை அது என்றும் அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்