Images
  • canada
    (படம்: AFP/Don EMMERT)

கனடாவின் டொரொன்ட்டோ நகரில் முடக்கநிலை

கனடாவின் ஆகப் பெரிய நகரான டொரொன்ட்டோவிலும் (Toronto), அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளிலும் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறு நாள் அது நடப்புக்கு வரும்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அந்த வட்டாரத்தில் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 100,000ஐத் தாண்டியுள்ளது.

உள்ளரங்கப் பொது நிகழ்ச்சிகளும், சமூக ஒன்றுகூடல்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

வெளியிடங்களில் அதிகபட்சம் 10 பேர் கூடலாம்.

உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி இல்லை.
உணவை நேரில் வந்தோ, காரிலோ வாங்கிச் செல்லத் தடையில்லை.

இவ்வேளையில், அரசாங்கப் பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவை தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Top