Images
  • Plastic ban

மலேசியாவிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளைக் கனடா திரும்பப் பெற்றுக்கொள்ளுமா?

கனடா தனது பிளாஸ்டிக் குப்பைகளை மலேசியாவிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான எந்தத் திட்டமும் வைத்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 நாடுகளிலிருந்து வந்த பிளாஸ்டிக் குப்பைகள் சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்பப்படும் என்று மலேசிய அரசாங்கம் மே மாதம் தெரிவித்திருந்தது. கனடா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அந்தப் பட்டியிலில் இடம்பெற்றுள்ளன. திருப்பியனுப்பப்பட வேண்டிய பிளாஸ்டிக் குப்பையின் அளவு 3,000 டன்.

கனடாவிலிருந்து மலேசியாவிற்குக் குப்பைகள் அனுப்பப்பட்டதுகுறித்துக் கனடா எந்தத் தகவலையும் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கனடாவைச் சேர்ந்த பிளாஸ்டிக் குப்பையின் அளவு பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. 

Top