Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எல்லைகளைத் திறந்துவிடும் கனடா

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எல்லைகளைத் திறந்துவிடும் கனடா

வாசிப்புநேரம் -
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எல்லைகளைத் திறந்துவிடும் கனடா

(படம்: REUTERS/Chris Wattie)

அமெரிக்கக் குடியிருப்பாளர்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்குத் தனது எல்லைகளைத் திறந்துவிடுவதாக, கனடா அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 9-ஆம் தேதி, தனிமைப்படுத்தப்படும் அவசியம் இன்றி, அவர்கள் கனடாவுக்குச் செல்லலாம்.

மேலும், செப்டம்பர் 7-ஆம் தேதிமுதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கும் எல்லையைத் திறந்துவிடுவதாக, கனடா குறிப்பிட்டது.

அமெரிக்க-கனடிய எல்லை, சென்ற ஆண்டு மார்ச் மாதம்-முதல், அவசியமற்ற பயணங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

ஆனால், பயணக் கட்டுப்பாடுகளை அகற்றும்படி, கனடியப் பயணத் துறை அரசாங்கத்தை நெருக்கிவருகிறது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட தனது குடிமக்களும் நிரந்தரவாசிகளும், வெளிநாட்டில் இருந்து திரும்பும்போது தனிமைப்படுத்தப்படும் அவசியம் இல்லையென, கனடா, இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்