Images
  • canada covid
    (படம்: APPaul Chiasson/The Canadian Press)

கனடாவில் மூன்றாம் முறையாகக் கிருமிப்பரவல்...

கனடாவில் மூன்றாவது முறையாக COVID-19 கிருமிப்பரவல் சம்பவங்கள் அதிவேகமாக அதிகரித்து வருகின்றன.

மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது
உலக அளவில் பல நாடுகளில் கிருமிப்பரவல் மூன்றாவது முறையாகப் பரவுவதாய் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறினார். இப்போது கனடாவும் அந்த நிலையைச் சந்தித்துள்ளதாகச் செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார். கடந்த ஒரு வாரத்தில், அன்றாடம் சராசரியாகக் கிட்டத்தட்ட 5,200 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அங்கு பதிவாகின்றன.

கனடாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,000 பேர் மாண்டுவிட்டனர்.

கனடாவில் ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமான ஒண்டாரியோ, கடந்த வார இறுதியிலிருந்து குறிப்பிட்ட அளவில் முடக்கநிலையை அறிவித்துள்ளது.

எனினும் அந்த நடவடிக்கைகள் மட்டும் போதுமானவையாக இருக்கமாட்டா என்றும் இன்னும் தீவிரமான முயற்சிகள் தேவை என்றும் அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.
அது குறித்து மேலும் கலந்துரையாடப்படும் எனத் திரு. ட்ரூடோ உறுதியளித்தார்.

இதுவரை அங்கு 10 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

38 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கனடாவில்,
வரும் செப்டம்பர் மாதத்துக்குள் விருப்பமுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் கனடியப் பிரதமர் கூறியுள்ளார். 

Top