Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிருமித்தொற்றுக்கு ஆளாகும் புற்றுநோய் நோயாளிகள் மரணமடையும் அபாயம் இரு மடங்கு அதிகம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் Covid-19 கிருமித்தொற்றுக்கு ஆளானால், மற்றவர்களை விட, அவர்கள் மரணமடைய இரு மடங்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் Covid-19 கிருமித்தொற்றுக்கு ஆளானால், மற்றவர்களை விட, அவர்கள் மரணமடைய இரு மடங்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 அமெரிக்கா, கனடா, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த Covid-19 நோயாளிகள் 900 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், புற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்பு விகிதம் அதிகமாய் இருப்பது தெரியவந்தது.

புற்று நோய்க்கு ஆளாகி, அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் இருப்போர் அதிக அபாயத்துக்கு உரியவர்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

ஆண், வயது முதிர்ச்சி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய் உடையவர்கள், முன்னர் புகைபிடித்தவர்கள் ஆகியோருக்கு கிருமித்தொற்றால் மரணம் நேரும் அபாயம் அதிகம் என்று ஆய்வு முடிவு கூறுகிறது.

மருத்துவ சஞ்சிகையான The Lancet அந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்