Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் புற்றுநோயால் மாண்டவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது

ஐரோப்பிய ஒன்றியத்தில் 5 ஆண்டுகளாகப் புற்றுநோயால் மாண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஐரோப்பிய ஒன்றியத்தில் புற்றுநோயால் மாண்டவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது

படம்: Pixabay

ஐரோப்பிய ஒன்றியத்தில் 5 ஆண்டுகளாகப் புற்றுநோயால் மாண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோயால் மடியக்கூடிய அபாயம் ஆண்களுக்கு 2014ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க இவ்வாண்டு 6 விழுக்காடு குறைந்துள்ளது.

பெண்களைப் பொறுத்தவரை அந்த விகிதம் 3 புள்ளி 6 விழுக்காடு குறைந்துள்ளது.

நுரையீரல் புற்றுநோயால் இவ்வாண்டும் அதிக எண்ணிக்கையில் மரணம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆகப்பெரிய நாடுகளில் மார்பகப் புற்றுநோயால் மாண்டோரின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வந்துள்ளது.

பிரிட்டனில் அந்த விகிதம் 13 விழுக்காடும் பிரான்ஸில் 10 விழுக்காடும் குறைந்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்