Images
  • spacex
    படம்: AP images

எலும்புப் புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர் விண்வெளிக்குச் செல்கிறார்

அமெரிக்காவில் எலும்புப் புற்றுநோயுடன் போராடி வென்ற பெண்மணியான Hayley Arceneaux, தனியார் விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SpaceX நிறுவனத்தின் விண்கலம் அவரை ஏற்றிச் செல்லும்.

29 வயது மருத்துவ உதவியாளரான Hayley, இவ்வாண்டின் பிற்பகுதியில் விண்வெளிக்குச் செல்லவிருப்பதாகக் கூறப்பட்டது.

செல்வந்தர் ஒருவர் வாங்கிய விண்வெளி விமானத்தில் அவர் செல்லவிருக்கிறார். அந்தப் பயணத்தில், செல்வந்தரும் இன்னும் 2 பேரும் Hayley-யுடன் செல்வர் என்று தெரிவிக்கப்பட்டது.

விண்வெளிக்குச் சென்ற ஆக இளம் அமெரிக்கர் என்ற சாதனையை Hayley படைக்கவுள்ளார்.

விண்வெளிக்குச் செல்பவர்களில், செயற்கை உடல் உறுப்பு பொருத்தப்பட்ட முதல் நபராகவும் அவர் பெயர் பெறுவார்.

10 வயதில் அவருக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இடப்பக்கத் தொடை எலும்பில் titanium கம்பியும் பொருத்தப்பட்டது.

புற்றுநோயுடன் நடத்திய போராட்டம், தம்மை விண்வெளிப் பயணத்துக்கு ஆயத்தப்படுத்திச் சவால்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொடுத்துள்ளதாக Hayley கூறியுள்ளார். 

Top