Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புற்றுநோயை வென்று, கிருமியிடம் தோற்ற 15 வயதுச் சிறுமி

புற்றுநோயை வென்று, கொரோனா கிருமியிடம் தோற்றுப்போனார் அமெரிக்காவின் கென்ட்டக்கி (Kentucky) மாநிலத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி.

வாசிப்புநேரம் -
புற்றுநோயை வென்று, கிருமியிடம் தோற்ற 15 வயதுச் சிறுமி

(கோப்புப் படம்: Reuters)

புற்றுநோயை வென்று, கொரோனா கிருமியிடம் தோற்றுப்போனார் அமெரிக்காவின் கென்ட்டக்கி (Kentucky) மாநிலத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி.

அலெக்ஸா ரோஸ் வெய்ட் (Alexa Rose Veit) என்ற அவர் சென்ற ஆண்டு கோடைக்காலத்தின்போது புற்றுநோய்க்கு 30 நாள் சிகிச்சை பெற்றார். அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்தார்.

ஆனால், சென்ற மாதம் அவருக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டது.
அலெக்ஸாவின் நிலை மோசமடைந்ததால், அவருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.

நோயிலிருந்து மீள முடியாமல் போராடிய அவர், 15ஆம் தேதி மாண்டதாக CNN செய்தி நிறுவனம் கூறியது.

அலெக்ஸாவின் தாயார், தாத்தா, பாட்டி ஆகியோரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அனைவருடனும் எளிதாகப் பழகும், புத்திசாலிச் சிறுமியான அலெக்ஸாவின் மரணம், பெரிய இழப்பு என்று கென்ட்டக்கி மாநில ஆளுநர் கூறினார்.

கிருமித்தொற்று ஆபத்தான ஒன்று என வலியுறுத்திய அவர், கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கென்ட்டக்கி மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்