Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Carlsberg காகித போத்தல்களை வெளியிடத் திட்டம்

Carlsberg, மதுபானத்தைக் காகித போத்தல்களில் விற்கும் அதன் இலக்கை நெருங்கிவருகிறது.

வாசிப்புநேரம் -

Carlsberg, மதுபானத்தைக் காகித போத்தல்களில் விற்கும் அதன் இலக்கை நெருங்கிவருகிறது.

மர நார்ப்பொருளால் செய்யப்பட்ட போத்தல்களுக்கான இரண்டு மாதிரிகளை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

போத்தல்களிலிருந்து மதுபானம் கசியாமலிருக்க ஒரு மாதிரியின் உட்புறத்தில் மறுபயனீடு செய்யப்பட்ட பிளாஸ்டிக் பூசப்பட்டிருக்கும்.

மற்றொரு மாதிரியின் உட்புறத்தில் விலங்கு, தாவர அடிப்படையிலான திரவம் போன்றது பூசப்பட்டிருக்கும்.

நிறுவனம் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க மேற்கொண்டுள்ள முயற்சிகளில் இந்தப் போத்தல்களும் ஒன்று.

போத்தல்களுக்கான திட்டம் 2015இல் தொடங்கியது.

அவை அடுத்த சில ஆண்டுகளுக்குள் வாடிக்கையாளர்களைச் சென்றடையாது.

புதிய போத்தல்களுக்கான மூலப்பொருள்களைப் பெறுவதில் சிரமம் உள்ளது.

அவை பானத்தின் சுவையைப் பாதிக்காமலும் இருக்கவேண்டும்.

இந்தக் காரணங்களால் போத்தல்களை வடிவமைக்க காலஅவகாசம் தேவைப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்