Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பூனைகள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் முயற்சி- MeowTalk செயலி

காலம் காலமாக விலங்குகள் "வாயில்லா ஜீவன்கள்" என்று அழைக்கப்பட்டுவருகின்றன.

வாசிப்புநேரம் -
பூனைகள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் முயற்சி- MeowTalk செயலி

(படம்: Pixabay)

காலம் காலமாக விலங்குகள் "வாயில்லா ஜீவன்கள்" என்று அழைக்கப்பட்டுவருகின்றன.

ஆனால், அவை எழுப்பும் சத்தங்களுக்குப் பொருள் இருக்கிறது என்கின்றனர் சிலர்.

அதனைச் செயலி மூலம் புரிந்துகொள்ளவும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

MeowTalk என்னும் செயலி, பூனைகள் எழுப்பும் வெவ்வேறு 'மியாவ்' சத்தங்களுக்கான பொருளைப் புரியவைக்க முயற்சி செய்கிறது.

அது செயற்கை நுண்ணறிவாற்றலைக் கொண்டு செயல்படுகிறது.

தற்போது, செயலியின் தரவுத்தளத்தில் 13 சொற்றொடர்கள் இடம்பெறுகின்றன.

"எனக்கு உணவு வேண்டும்", "நான் கோபமாக இருக்கிறேன்", "என்னைத் தனியே விடுங்கள்!" போன்ற தொடர்கள் பட்டியலில் உள்ளன.

ஒவ்வொரு பூனை எழுப்பும் 'மியாவ்' சத்தத்தின் பொருளும் வேறுபட்டது. அதனால், பொதுவான தரவுத்தளத்தை அமைப்பதற்குப் பதிலாக, வெவ்வேறு பூனைகளின் ஒலிக்குறிப்புகளைப் பதிவுசெய்து அதற்கேற்பப் புரிந்துகொள்ளும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

MeowTalk செயலியைத் தற்போது Google Play, Apple App Store ஆகிய தளங்களில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்