Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஓய்வு வயதை நெருங்கும் விமானிகள் முன்கூட்டியே ஓய்வுபெறலாம்: Cathay Pacific விமான நிறுவனம்

ஓய்வு வயதை நெருங்கும் விமானிகள் முன்கூட்டியே ஓய்வுபெறலாம்: Cathay Pacific விமான நிறுவனம்

வாசிப்புநேரம் -

Cathay Pacific விமான நிறுவனம், ஓய்வு வயதை நெருங்கும் விமானிகள் தாமாகவே முன்கூட்டியே ஓய்வுபெறும் திட்டத்தை அறிவித்துள்ளது.

கிருமிப்பரவல் சூழலில் செலவுகளைக் குறைப்பதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டது.

விமானப் பயணங்களுக்கான தேவையில் எந்த முன்னேற்றமும் இல்லாததை நிறுவனம் சுட்டியது.

செலவுகளைக் குறைக்க நிறுவனம் ஏற்கனவே சில குறுகியகால நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவ்வாண்டின் முற்பாதியில், நிறுவனத்துக்கு 1.28 பில்லியன் டாலர் நட்டம் ஏற்படுமென Cathay Pacific கடந்த மாதம் முன்னுரைத்தது.

அந்த மதிப்பீடு உறுதிப்படுத்தப்பட்டால் கடந்த பத்தாண்டுகளில் நிறுவனத்தின் ஆகப்பெரிய அரையாண்டு இழப்பாக அது இருக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்