Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிள்ளைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பாதிரியார்கள்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், சுமார் 300 பாதிரியார்கள், ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகத் தெரிய வந்துள்ளது.

வாசிப்புநேரம் -
பிள்ளைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பாதிரியார்கள்

(படம்: Pixabay)

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், சுமார் 300 பாதிரியார்கள், ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகத் தெரிய வந்துள்ளது.

கத்தோலிக்க தேவாலயம் அந்தப் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை மூடிமறைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு பாதிரியார்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குற்றங்கள் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

குற்றங்களைப் புரிந்த பெரும்பாலான பாதிரியார்கள் காலமாகிவிட்டனர்.

பிள்ளைப் பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகியோரில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பல ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் பலரின் தகவல்கள் காணாமல்-போனதாலும், சம்பவம் குறித்துப் புகார் செய்ய பலர் முன்வரத் தயங்கியதாலும், எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்