Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சோவினுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது - அமெரிக்கத் தலைவர்கள்

கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபுளோய்டின் மரணத்துக்குக் காரணமாக டெரேக்  சோவின்  (Derek Chauvin) குற்றவாளி என வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை, அமெரிக்கத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். 

வாசிப்புநேரம் -

கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபுளோய்டின் மரணத்துக்குக் காரணமாக டெரேக் சோவின் (Derek Chauvin) குற்றவாளி என வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை, அமெரிக்கத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இனவாதம் என்பது "தேசத்தின் ஆன்மா மீது விழுந்த கறை" என்று கூறிய அதிபர் ஜோ பைடன், நீதியை நோக்கி முன்னேறுவதற்கான முக்கியமான படி அந்தத் தீர்ப்பு என்று சொன்னார்.

மாண்ட திரு. ஃபுளோயிட்டின் குடும்பத்தாரது துணிவை, அவர் பாராட்டினார்.

எந்தவொரு நடவடிக்கையும் திரு. ஃபுளோயிட்டை உயிரோடு திருப்பித்தரப் போவதில்லை... ஆனால், இந்தத் தீர்ப்பு அமெரிக்காவில், நீதியை நோக்கிய பயணத்தில் பெரிய முன்னேற்றம் என்றார் திரு. பைடன்.

"இனவாத அநீதி" என்பது கறுப்பினத்தவர் சார்ந்த பிரச்சினை மட்டும் அல்ல. அது, அமெரிக்கர் ஒவ்வொருவருடைய பிரச்சினை என்று துணையதிபர் கமலா ஹாரிஸ் கூறினார்.

"நீதியும் சுதந்திரமும் அனைவருக்கும் உரியது" என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதிலிருந்து, இனவாதம் நம்மைத் தடுப்பதாக அவர் சொன்னார்.

நாட்டின் முழுமையான ஆற்றலை உணர்ந்து கொள்வதையும் அது தடுப்பதாகத் திருவாட்டி ஹாரிஸ் கூறினார்.

நடுவர்கள், சரியான தீர்ப்பை வழங்கியிருப்பதாக முன்னாள் அதிபர் ஒபாமா Twitter இல் கூறியுள்ளார். என்றாலும், உண்மையான நீதியின்கீழ் இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்