Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜார்ஜ் புளோய்ட் மரணத்தில், காவல் அதிகாரி ஷாவின் குற்றவாளி எனத் தீர்ப்பு

சுமார் 9 நிமிடங்களுக்கும் கூடுதலாக Floyd இன் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார் Chauvin. 

வாசிப்புநேரம் -
ஜார்ஜ் புளோய்ட் மரணத்தில், காவல் அதிகாரி ஷாவின் குற்றவாளி எனத் தீர்ப்பு

(படம்: Court TV via AP)

 அமெரிக்காவில் கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபுளோய்ட் கொல்லப்பட்டதன் தொடர்பில், காவல்துறை முன்னாள் அதிகாரி டெரேக் சோவின் (Derek Chauvin) குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

12 பேர் கொண்ட நீதிபதிகள் குழு 24 மணி நேரத்துக்குள் அந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

சென்ற ஆண்டு மினியாபொலிஸ் (Minneapolis)
நகரில் காவல்துறை முன்னாள் அதிகாரி சோவின், கறுப்பின ஆடவர் புளோய்ட்டைக் கைது செய்தார்.

அப்போது சுமார் 9 நிமிடங்களுக்கும் கூடுதலாக புளோய்ட்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார் சோவின்.

அதனால் புளோயிட் மூச்சுத் திணறி மாண்டார்.

அந்தச் சம்பவத்தின் காணொளி உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மூன்று குற்றச்சாட்டுகளில் சோவின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை குறித்து அறிவிக்கப்படும் வரை சோவின் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்