Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செர்ரி புளோசம் - அதன் மகத்துவம் என்ன, அது எப்படி அமெரிக்காவிற்குச் சென்றது?

செர்ரி புளோசம் (Cherry Blossom) மலர்களை நாம் ஜப்பான்,அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுவாகக் காணலாம்.

வாசிப்புநேரம் -

செர்ரி புளோசம் (Cherry Blossom) மலர்களை நாம் ஜப்பான்,அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுவாகக் காணலாம்.

செர்ரி மரங்கள் Rosaceae எனும் ரோஜா குடும்பத்தைச் சேர்ந்தவை.

ஜப்பானில், செர்ரி புளோசமை சக்குரா ('Sakura') மலர்கள் என்றும் அழைப்பார்கள்.

செர்ரி மரங்கள் பூ பூக்கும் போது, ​​மக்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பூக்களைப் பார்க்க வருவர். உணவு, பானம், இசையுடன் 'ஹனாமி' எனும் பண்டிகையைக் கொண்டாடுவர் என்று BBC செய்தி குறிப்பிட்டது.

'ஹனாமி' என்றால் பூக்களைப் பார்ப்பது என்று அர்த்தம்.

ஜப்பானின் பெரும்பாலான நகரங்களில், செர்ரி மலர்கள் மலர்வது பொதுவாக ஏப்ரல் தொடக்கத்தில் நடைபெறும்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குள் பூக்கள் முழுமையாக மலர்ந்துவிடும். அடுத்த வாரத்தில் அவை உதிர்ந்துவிடும்.

(படம்: AFP / Philip FONG)

(படம்: AFP / Philip FONG)

ஜப்பானில், செர்ரி மலருக்கு ஆழமான கலாசார முக்கியத்துவம் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

அது அழகிற்காக மட்டும் ரசிக்கப்படவில்லை.

ஹனாமியின்போது பூக்களை ரசிப்போருக்கு, ஒரு வாழ்க்கைத் தத்துவமும் நினைவூட்டப்படுகிறது.

பூக்களைப் போல மனிதரின் வாழ்க்கையும் குறுகியது என்பதையும், எனவே வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்பதையும் அது குறிக்கிறது.

புதுப்பித்தல், எதிர்கால மகிழ்ச்சி அகியவற்றின் சின்னமாகவும் செர்ரி பூக்கள் விளங்கும்.

அமெரிக்காவிற்கு எப்படி செர்ரி புளோசம் சென்றது?

1912 ஆம் ஆண்டில், ஜப்பானால் அமெரிக்காவிற்கு ஆயிரக்கணக்கான செர்ரி மரங்கள் பரிசளிக்கப்பட்டன.

(படம்: AFP / TIMOTHY A. CLARY)

(படம்: AFP / TIMOTHY A. CLARY)

அதை நினைவுகூரும் வகையில், அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும், 1.5 மில்லியன் மக்கள் வாஷிங்டனில் செர்ரி மலர் திருவிழாவில் கலந்துகொள்வர்.

(படம்: AFP / MANDEL NGAN)

(படம்: AFP / MANDEL NGAN)

சிங்கப்பூரில் செர்ரி புளோசம்?

சிங்கப்பூரின் சில இடங்களில் காணப்படும் Trumpet Tree மரங்களில் மலரும் பூக்கள் காண்பதற்கு சக்குரா மலர்களைப் போல் இருக்கும்.

(படம்: Muhammad Fadli Baharudin, NParks. Facebook/Desmond Lee)

(படம்: Muhammad Fadli Baharudin, NParks. Facebook/Desmond Lee)

(படம்: NParks. Facebook/Desmond Lee)

(படம்: NParks. Facebook/Desmond Lee)

Trumpet Tree-ஐ சிங்கப்பூரின் செர்ரி புளோசம் என்றும் அழைப்பதுண்டு.  


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்