Images
  • CHERRY
    (படம்: Rabbinat Le/Facebook)

செர்ரியில் புழு தென்படும் காணொளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஹாங்காங்: செர்ரியில் புழு தென்படும் காணொளியால் அமெரிக்காவின் செர்ரி விற்பனை சரிவைக் கண்டது.

இணையத்தில் பரவிவரும் காணொளியில், செர்ரியைப் பாதியாக வெட்டி உள்ளே பார்க்கும்போது வெள்ளை விதைகள் இருப்பதைப்போல் தென்படுகிறது.


ஆனால் அவை புழுக்கள். அதுவும் உயிரோடு இருக்கும் புழுக்கள்.

அருவருப்பான காட்சியைக் கொண்ட அந்தக் காணொளி Facebook தளத்தில் 41 மில்லியன் முறை பார்க்கப்பட்டது.

அதன் விளைவாக செர்ரி விற்பனை குறைந்துள்ளதாக வட அமெரிக்காவின் விவசாயிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும் காணொளியில் இடம்பெற்ற செர்ரி அமெரிக்காவைச் சேர்ந்தது என்பதற்கு ஆதாரம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
 

Top