Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சதுரங்க விளையாட்டு இடம்பெறுமா?

சதுரங்க விளையாட்டை, 2024ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

வாசிப்புநேரம் -
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சதுரங்க விளையாட்டு இடம்பெறுமா?

படம்: Pixabay

சதுரங்க விளையாட்டை, 2024ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பாரம்பரியச் சதுரங்க விளையாட்டின் விரைவு- வடிவமான 'rapid and blitz' போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று அனைத்துலக சதுரங்கச் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

சதுரங்கம் உலக அளவில் புகழ்பெற்றது. 189 நாடுகளில் அதற்கென தேசியச் சம்மேளனங்கள் இருப்பதாகவும், சுமார் 600 மில்லியன் பேர் சதுரங்க விளையாட்டில் பங்கெடுப்பதாகவும் சம்மேளனம் குறிப்பிட்டது.

அனைத்துலக ஒலிம்பிக் குழு, 1999ஆம் ஆண்டு சதுரங்கத்தை அங்கீகரித்தது. ஓராண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டிகளின்போது, காட்சி-அங்கமாக மட்டும் சதுரங்கம் இடம்பெற்றது.

அடுத்த ஆண்டு தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் சதுரங்கம் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, 2024ஆம் ஆண்டு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்