Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கோழி nugget துண்டு!

விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு அனைவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை.

வாசிப்புநேரம் -
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கோழி nugget துண்டு!

(படம்: Pixabay)

விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு அனைவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை.

ஆனால் பிரிட்டனில் கோழி nugget துண்டுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது!

CNN செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.

பிரிட்டனில் செயல்படும் Iceland எனும் பேரங்காடி, அதன் 50 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, கோழி nugget துண்டை விண்வெளிக்கு அனுப்பியது.

பேரங்காடியில் விற்கப்படும் nugget துண்டுகள் வாடிக்கையாளர்களிடையே அதிகப் பிரபலம் என்பதால் அதனை விண்வெளிக்கு அனுப்ப எண்ணியதாகப் பேரங்காடி சொன்னது.

வேல்ஸ் (Wales) பகுதியில் அமைந்துள்ள அதன் தலைமையகத்திற்கு அருகிலிருந்து பாய்ச்சப்பட்ட nugget, வளிமண்டலத்தில் சுமார் 33 கிலோமீட்டர் தூரம் வரை சென்றது.

பேரங்காடி nugget துண்டின் பயணத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்