Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

20 ஆண்டுகளில் முதன்முறையாக அதிகரித்துள்ள பிள்ளைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை

உலகில், 20 ஆண்டுகளில் முதன்முறையாகப் பிள்ளைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
20 ஆண்டுகளில் முதன்முறையாக அதிகரித்துள்ள பிள்ளைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை

(படம்: AFP/ISSOUF SANOGO)

உலகில், 20 ஆண்டுகளில் முதன்முறையாகப் பிள்ளைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியுள்ளது.

கிருமித்தொற்றால், மேலும் மில்லியன்கணக்கான சிறுவர்கள் வேலையில் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக அது சொன்னது.

அனைத்துலக ஊழியர் அமைப்பும் ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியும் (UNICEF) இணைந்து வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது.

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் பிள்ளைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 160 மில்லியனாக இருந்தது.

அந்த எண்ணிக்கை, 4 ஆண்டுகளில் 8.4 மில்லியன் அதிகரித்திருப்பதைக் காட்டுவதாக அறிக்கை குறிப்பிட்டது.

2000ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிள்ளைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 94 மில்லியன் குறைந்திருந்தது.

கிருமிப்பரவல் மோசமாகத் தொடங்கியபோது, உலக அளவில் சுமார் 10இல் ஒரு பிள்ளை வேலை செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அடுத்த 2 ஆண்டுகளில், ஏறத்தாழ 50 மில்லியன் பிள்ளைகள் வேலைசெய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் என்று அறிக்கை எச்சரித்தது.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்