Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா மனித உரிமை மன்றத்திலிருந்து விலகல் - சீனா வருத்தம்

மனித உரிமை தொடர்பான பிரச்சினைகள் நீண்டகாலமாக இரு நாடுகளுக்கு இடையே சிக்கல்களை ஏற்படுத்தி வந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
அமெரிக்கா மனித உரிமை மன்றத்திலிருந்து விலகல் - சீனா வருத்தம்

(படம்: REUTERS/Denis Balibouse)

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமை மன்றத்திலிருந்து விலகும் அமெரிக்காவின் முடிவு குறித்து சீனா வருத்தம் தெரிவித்துள்ளது.

உரிமைகளைக் காக்கும் நாடாக இதுவரை திகழ்ந்த அமெரிக்கா அந்த அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்குள்ளாகியுள்ளதாகவும் சீன ஊடகங்கள் கூறிவருகின்றன.

இஸ்ரேலுக்கு எதிரான பாரபட்சம், போதுமான சீர்திருத்தம் இல்லாதது ஆகியவற்றை அவர் காரணம் காட்டினார்.

உலக அளவில் மனித உரிமைகள் மேம்பட தொடர்ந்து பங்காற்றப் போவதாகச் சீனா தெரிவித்துள்ளது.

சீனாவில் மனித உரிமைப் பிரச்சினைகள் இருப்பதாக அமெரிக்கா விடுத்துள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அது கூறியுள்ளது.

மனித உரிமை தொடர்பான பிரச்சினைகள் நீண்டகாலமாக இரு நாடுகளுக்கு இடையே சிக்கல்களை ஏற்படுத்தி வந்துள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்