Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனா, நாணய மதிப்பில் முறைகேடு புரியும் நாடு என்னும் குற்றச்சாட்டைக் கைவிட்டது அமெரிக்கா

சீனாவை, நாணய மதிப்பில் முறைகேடு புரியும் நாடு என்று வகைப்படுத்தியிருப்பதைக் கைவிடுவதாக, அமெரிக்க நிதியமைச்சு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சீனா, நாணய மதிப்பில் முறைகேடு புரியும் நாடு என்னும் குற்றச்சாட்டைக் கைவிட்டது அமெரிக்கா

(படம்: REUTERS/Jason Lee/File Photo)

சீனாவை, நாணய மதிப்பில் முறைகேடு புரியும் நாடு என்று வகைப்படுத்தியிருப்பதைக் கைவிடுவதாக, அமெரிக்க நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசலுக்குத் தீர்வுகாணும் முதற்கட்ட உடன்பாடு கையெழுத்தாகவிருக்கும் சில நாள்களுக்குமுன், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அமெரிக்க நிதியமைச்சு, ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் நாணய அறிக்கையில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அந்த முடிவு வெளியானது.

முதற்கட்ட வர்த்தக உடன்படிக்கையின் ஒருபகுதியாக, நாணய மதிப்பை முறைகேடாகக் குறைக்கும் செயல்களில் இருந்து ஒதுங்கியிருக்கச் சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக, நிதியமைச்சு குறிப்பிட்டது.

நியாயமற்ற வர்த்தக லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, சீனா தனது யுவான் நாணய மதிப்பை வேண்டுமென்றே குறைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குறைகூறிவந்துள்ளது.

இப்போது அந்தக் குற்றச்சாட்டை அமெரிக்கா விலக்கிக்கொள்வதன் மூலம், சீனா பெரிய பலன்களை அடையப்போவதில்லை.

இருப்பினும் அது, சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா தெரிவிக்கும் முக்கியமான நல்லெண்ண அறிகுறியாகக் கருதப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்