Images
  • grg
    (படம்: REUTERS/Thomas Peter)

'சீனாவிலிருந்து வெளிவரும் தகவல்களில் அதிக நம்பிக்கையில்லை' - அமெரிக்கா

COVID-19 கிருமிப்பரவல் தொடர்பில் சீனாவிலிருந்து வெளிவரும் தகவல்களில் அதிக நம்பிக்கையில்லை என்று வெள்ளை மாளிகையின் பொருளியல் ஆலோசகர் லாரி குட்லோ (Larry Kudlow) கூறியுள்ளார்.

அமெரிக்கா வழங்க முன்வந்த உதவிகளைச் சீனா தொடர்ந்து ஏற்க மறுப்பதை அவர் சுட்டினார்.

பாதிக்கப்பட்டோர் பற்றித் துல்லியமான விவரம் இல்லை என்றும், கிருமிப் பரவலைச் சீனா கையாளும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் லாரி குட்லோ (Larry Kudlow) சொன்னார்.  

Top