Images
  • china flag
    (படம்: AFP)

கனடியர்கள் இருவரைக் கைது செய்துவைத்திருப்பதாக சீனா அறிவிப்பு

கனடியர்கள் இருவரைத் தான் கைது செய்து வைத்திருப்பதாகச் சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தேசியப் பாதுகாப்பின் அடிப்படையில் அவர்கள் இருவரும் சில மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க இரகசியங்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அரசதந்திரி மைக்கல் கோவ்ரிக், வர்த்தகர் மைக்கல் ஸ்பாவொர் - இருவரையும் சீன அதிகாரிகள் கைது செய்தனர்.

சீனத் தொலைத் தொடர்பு நிறுவனம் Huawei யின் தலைமை நிதி நிர்வாகி சென்ற ஆண்டு டிசம்பர் முதல் தேதி கனடாவில் கைது செய்யப்பட்டார்.

அதற்குப் பதிலடியாகச் சீனா, கனடியர்கள் இருவரையும் கைது செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

Top