Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனா: புதியவகை கொடூரமான நோய்த்தொற்று சரியாகக் கையாளப்படுகிறது

 சீனா: புதியவகை கொடூரமான நோய்த்தொற்று சரியாகக் கையாளப்படுகிறது

வாசிப்புநேரம் -
சீனா: புதியவகை கொடூரமான நோய்த்தொற்று சரியாகக் கையாளப்படுகிறது

(கோப்புப் படம்: REUTERS/Denis Balibouse)

சீனாவில் ஏற்பட்டுள்ள bubonic plague எனும் புதியவகை கொடூரமான நோய்த்தொற்று, சரியாகக் கையாளப்படுவதாகவும், பெரிய அபாயமாக வகைப்படுத்தப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை ஒன்றில் புதியவகை நோய்த்தொற்றுச் சம்பவம் பதிவானதைத் தொடர்ந்து, Inner Mongolia வட்டாரத்தின் பாயான் நூர் என்னும் நகரத்தில், அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த நவம்பர் மாதத்தில் நால்வருக்கு அந்தத் நோய்த்தொற்று ஏற்பட்டது.

அவர்களில் இரண்டு பேருக்குக் கொடிய நிமோனியா நோய்த்தொற்றுடன் தொடர்புடைய நோய் ஏற்பட்டிருந்தது.

சீனாவில் ஏற்படும் தொற்றுநோய்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

அது சீன, மங்கோலிய அதிகாரிகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறியது.

இந்த வகை கொடிய நோய்த்தொற்றுக்கு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு "Black Death" என்று பெயர் சூட்டப்பட்டது.

கொறிக்கும் விலங்குகளால் பரவும் அந்நோய் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்