Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனா ஊழல் தடுப்பு ஆணையத்தை அமைப்பதற்கான குற்றவியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவிருக்கிறது

ஊழல் தடுப்புக் கட்டமைப்பில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் சந்தேக நபர்களின் மனித உரிமைகளை மீறக்கூடும் என்ற சட்டத்துறை வல்லுநர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சீனா அதனைத் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
சீனா ஊழல் தடுப்பு ஆணையத்தை அமைப்பதற்கான குற்றவியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவிருக்கிறது

(படம்:Reuters)

சீனா, புதிய ஊழல் தடுப்பு ஆணையத்தை அமைப்பதற்கு வழிவகுக்கும் குற்றவியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது.

ஊழல் தடுப்புக் கட்டமைப்பில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் சந்தேக நபர்களின் மனித உரிமைகளை மீறக்கூடும் என்ற சட்டத்துறை வல்லுநர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சீனா அதனைத் தெரிவித்தது.

தேசிய மேற்பார்வை ஆணையம் நேற்று ( மார்ச் 11 ) சீனாவின் அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 

புதிய முறையின் கீழ், தடுப்புக்காவலில் இருக்கும் சந்தேக நபர்கள் வழக்கறிஞரைப் பார்க்க இயலாது. 

அந்தச் சட்டம் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது நடைபெறும் வருடாந்தர நாடாளுமன்றக் கூட்டத்தில் அந்தச் சட்டம் குறித்த விவரங்கள் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கூட்டத்தின் கடைசி நாளான, மார்ச் 20ஆம் தேதி, அது குறித்த வாக்களிப்பு இடம்பெறும்.

மேற்பார்வைச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.

ஊழலுக்கு எதிராக அதிபர் சி சின்பிங் தொடுத்துள்ள போரில் ஆக அண்மை நடவடிக்கை அந்தச் சட்டச் சீர்திருத்தம். 

புதிய மேற்பார்வை ஆணையத்தின் ஒரு பகுதியாக தடுப்புக்காவல் முறையைச் சீரமைக்க அவர் உறுதியளித்துள்ளார்.

2023ஆம் ஆண்டில் அவரின் தவணைக்காலம் நிறைவடைந்திருக்கும்.

ஆனால், அதிபரின் தவணைக்கால உச்சவரம்பை நீக்க நேற்று நாடாளுமன்றம் முடிவெடுத்தது.

அதிபர் சி சின்பிங் விரும்பினால், தமது வாழ்நாள் முழுவதும் அதிபராக நீடிப்பதற்கு அந்த மாற்றம் வழிவகுக்கிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்