Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அந்நியச் செலாவணியில் சீனா சூழ்ச்சி -அமெரிக்காவின் கருத்திற்கு பெய்ச்சிங் கண்டனம்

சீனா அந்நியச் செலாவணியில் சூழ்ச்சிசெய்யும் நாடு என்று அமெரிக்கா வகைப்படுத்தியிருப்பதற்கு, சீன மத்திய வங்கி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
அந்நியச் செலாவணியில் சீனா சூழ்ச்சி -அமெரிக்காவின் கருத்திற்கு பெய்ச்சிங் கண்டனம்

(படம்: AFP/Fred DUFOUR))

சீனா அந்நியச் செலாவணியில் சூழ்ச்சிசெய்யும் நாடு என்று அமெரிக்கா வகைப்படுத்தியிருப்பதற்கு, சீன மத்திய வங்கி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

வர்த்தகப் பூசல்களைச் சமாளிக்கும் வகையில் சீனா ஒருபோதும் யுவான் நாணயத்தை இதுவரை பயன்படுத்தியதில்லை, இனியும் பயன்படுத்தப் போவதில்லை என்று சீன மக்கள் வங்கி கூறியது.

சீனா அந்நியச் செலவாணியில் சூழ்ச்சி செய்கிறது என்று கூறுவது அனைத்துலக விதிமுறைகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்று சீன மக்கள் வங்கி கூறியது.

அமெரிக்க டாலருக்கு எதிராக சீன யுவான் நாணய மதிப்பு, படுவீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து, அந்நியச் செலாவணியில் சீனா சூழ்ச்சி செய்கிறது என்று அமெரிக்கா குறிப்பிட்டது.

1994-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா அத்தகைய அறிவிப்பை முதன் முறையாக விடுத்தது. அதனால் உலகளாவிய நிலையில் பங்குச் சந்தைகள் பாதிக்கப்பட்டன.

சிட்னியில் பங்குச் சந்தை இரண்டரை விழுக்காடு சரிந்தது.

ஷங்ஹாயில் ஒன்றரை விழுக்காடு சரிந்தது.

சிங்கப்பூரில் Straits Times குறியீடு 0.8 விழுக்காடு இறங்கியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்