Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பருவநிலை மாற்றம் தொடர்பில் சீனா உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

பருவநிலை மாற்றம் தொடர்பில் சீனா உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

வாசிப்புநேரம் -

பருவநிலை மாற்றத்தின் தொடர்பில் சீனா உறுதியான நடவடிக்கை எடுப்பதை எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மெர்க்கெல் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், அதன் தொடர்பில் சீன அதிபர் சி சின்பிங்குடன் காணொளி மூலம் உரையாடினர்.

பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இருதரப்பும் விரைவில் உயர்நிலைப் பேச்சு நடத்தக்கூடும் என்று திருமதி மெர்க்கெல் நம்பிக்கை தெரிவித்தார்.

சீனச் சந்தைகளைத் திறந்துவிடுமாறு ஒன்றியம் வலியுறுத்தியது.

வர்த்தக விவகாரங்களில் சீனா, ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதை இனியும் அனுமதிக்கப்போவதில்லை என ஒன்றியம் குறிப்பிட்டது.

ஒன்றியச் சந்தைகளில் வர்த்தகம் புரிய சீனாவுக்கு உள்ள அதேபோன்ற அனுமதி, சீனச் சந்தையில் ஒன்றியத்துக்கும் வழங்கப்பட வலியுறுத்தப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்