Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிலவகை ஏற்றுமதிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா

சிலவகை ஏற்றுமதிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா

வாசிப்புநேரம் -

தேசியப் பாதுகாப்பை முன்னிட்டு, சிலவகை ஏற்றுமதிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் புதிய சட்டத்தைச் சீனா நிறைவேற்றியுள்ளது.

புதிய சட்டம் டிசம்பர் மாதம் நடப்புக்கு வரும் என்று சீன அரசாங்க ஒலிபரப்புக் கழகமான CCTV தெரிவித்தது.

வெளிநாடுகளில் முதலீடு செய்தவை உள்ளிட்ட அனைத்துச் சீன நிறுவனங்களுக்கும் அந்தச் சட்டம் பொருந்தும்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் பதற்றத்தை அந்தச் சட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, ByteDance, Huawei, Tencent போன்ற சீன நிறுவனங்கள் மீது வாஷிங்டன் நடவடிக்கை எடுத்தது.

சீனா அதற்குப் பதிலடி கொடுக்கப் புதிய சட்டம் வகைசெய்யும் என்று கருதப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்