Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவுடனான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது மேலும் கடினமாகியிருக்கிறது - நியூஸிலந்துப் பிரதமர்

உலகில் பெய்ச்சிங்கின் பங்கு வளர்ந்து, மாறி வருவதை அவர் சுட்டினார்.

வாசிப்புநேரம் -
சீனாவுடனான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது மேலும் கடினமாகியிருக்கிறது - நியூஸிலந்துப் பிரதமர்

(படம்:REUTERS/Jason Lee/)


நியூஸிலந்துக்கும் சீனாவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது மேலும் கடினமாகியுள்ளதாக நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) கூறியுள்ளார்.

உலகில் பெய்ச்சிங்கின் பங்கு வளர்ந்து, மாறி வருவதை அவர் சுட்டினார்.

இருப்பினும் கருத்து வேறுபாடுகள் இருநாடுகளின் உறவைப் பாதிக்க வேண்டியதில்லை என்று திருவாட்டி ஆர்டன் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, அமெரிக்கா, நியூஸிலந்து ஆகியவை Five Eyes எனப்படும் பாதுகாப்புக் கூட்டணியில் இணைந்துள்ளன.

அந்தக் கூட்டணியைப் பயன்படுத்தி, பெய்ச்சிங்கின் நடவடிக்கைகளைக் குறைகூற நியூஸிலந்து தயங்கி வருகிறது.

கூட்டணியின் பங்கை விரிவபடுத்துவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று நியூஸிலந்து வெளியுறவு அமைச்சர் நானையா மஹுட்டா (Nanaia Mahuta) கூறினார்.

ஹாங்காங், சின்ஜியாங் மாநிலத்தில் உள்ள வீகர்கள் நடத்தப்படும் விதம் ஆகியவை குறித்து அந்தப் பாதுகாப்புக் கூட்டணி அறிக்கைகளை வெளியிடுவதைச் சீனா குறைகூறியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்