Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'கொரோனா கிருமித்தொற்றை முழுமையாக முறியடித்து வெற்றி காண்போம்' - சீன அதிபர் உறுதி

நொவல் கொரோனா கிருமித்தொற்றை முழுமையாக முறியடித்து வெற்றி காண முடியும் என்று சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
'கொரோனா கிருமித்தொற்றை முழுமையாக முறியடித்து வெற்றி காண்போம்' - சீன அதிபர் உறுதி

படம்: REUTERS

நொவல் கொரோனா கிருமித்தொற்றை முழுமையாக முறியடித்து வெற்றி காண முடியும் என்று சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் (Joko Widodo) தொலைபேசியில் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.

சீனா நிர்ணயித்துள்ள, பொருளியல், சமூக முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும் திரு. சி சொன்னார்.

இக்கட்டான சூழலில், இந்தோனேசியாவின் புரிந்துணர்வையும், நம்பிக்கையையும் சீன அதிபர் பாராட்டினார்.

சீனாவுக்கு மருத்துவப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளதை இந்தோனேசிய அதிபர் விடோடோ சுட்டினார்.

தேவைப்பட்டால், இன்னும் அதிகமான உதவிகளைச் செய்யத் தயாராயிருப்பதாகவும் அவர் சொன்னார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்