Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவில் உலகின் ஆக நீளமான ஊஞ்சல்

சீனாவில் உலகின் ஆக நீளமான ஊஞ்சல்

வாசிப்புநேரம் -
சீனாவில் உலகின் ஆக நீளமான ஊஞ்சல்

படம்: Longgang Scenic Spot


சீனாவின் சோங்சிங் நகராட்சியில் உலகின் ஆக நீளமான ஊஞ்சல் கட்டப்பட்டுள்ளது.

லோங்காங் (Longgang) சுற்றுலாப் பகுதியில் அமைந்துள்ள அது கடந்த மாதம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

வானவில் நிறத்தில் காட்சியளிக்கும் அந்த ஊஞ்சல் கின்னஸ் உலகச் சாதனைப் பதிவுகள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

100 மீட்டர் உயர வளைவையும் 108 மீட்டர் நீளத்தையும் கொண்டுள்ளது ஊஞ்சல்.

ஊஞ்சலில் விளையாடுவதற்கு முன்னர் பாதுகாப்புக் கருவிகளை அணிவது கட்டாயம்.

சுமார் 88 மீட்டர் உயரத்திலிருந்து ஊஞ்சல் விடுவிக்கப்படும்.

அதன் வேகம் மணிக்கு சுமார் 130 கிலோமீட்டர்.

திகிலை விரும்பும் பயணிகளுக்கு அது ஒரு நல்ல அனுபவமாக அமையக்கூடும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்