Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் பெண்ணைக் கடத்தி மரணம் விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபருக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை

அண்மையில் அமெரிக்காவில் அதிகமான குற்றச் சம்பவங்களில் மரணதண்டனை விதிக்கும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் பெண்ணைக் கடத்தி மரணம் விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபருக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை

(படம்:University of Illinois Police Department)

அமெரிக்காவுக்குச் சென்ற 26 வயது சீன  மாதுவைக் கடத்திச் சென்று துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

அமெரிக்க வழக்குரைஞர்கள் அவ்வாறு கூறியிருக்கின்றனர்.

கல்விமானான  சாங் யிங் யிங், இலனோயில் ஆய்வு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி அவர் கடத்தப்பட்டார்.

அவரின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் யிங்யிங் மாண்டதாகக் காவல்துறை நம்புகிறது.

அதற்கு 28 வயது கிரிஸ்தன்சென் காரணம் என்றும் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், கிரிஸ்தன்சென்மீது கடத்தல், கொலை போன்ற குற்றச்சாட்டுகள் பதிவாகின.
திட்டமிட்ட பிறகே அவர் அந்தச் செயலில் ஈடுபட்டிருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

அண்மையில் அமெரிக்காவில் அதிகமான குற்றச் சம்பவங்களில் மரணதண்டனை விதிக்கும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்