Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனா அதன் அணுவாயுத, ஏவுகணைத் திறனை மேம்படுத்துவதாகக் குறைகூறும் அமெரிக்கா- கண்டனம் தெரிவித்துள்ள பெய்ச்சிங்

சீனா அதன் அணுவாயுத, ஏவுகணைத் திறனை  மேம்படுத்துவதாகக் குறைகூறும் அமெரிக்க   அறிக்கைக்குப் பெய்ச்சிங் (Beijing) கண்டனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சீனா அதன் அணுவாயுத, ஏவுகணைத் திறனை மேம்படுத்துவதாகக் குறைகூறும் அமெரிக்கா- கண்டனம் தெரிவித்துள்ள பெய்ச்சிங்

(படம்: Reuters/Aly Song)

சீனா அதன் அணுவாயுத, ஏவுகணைத் திறனை மேம்படுத்துவதாகக் குறைகூறும் அமெரிக்க அறிக்கைக்குப் பெய்ச்சிங் (Beijing) கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசியப் பாதுகாப்பு, இராணுவத்தை நவீனமயமாக்குதல் ஆகியவை குறித்து அமெரிக்கா மீண்டும் அவதூறு பேசுவதாக சீனத் தற்காப்பு அமைச்சு சாடியது.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் அறிக்கையில், சீனா அதன் நில, ஆகாய, கடற்படைகள் அனைத்தையும் வலுப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது.

தைவானைக் கைப்பற்றவோ, அதனுடன் போரிடவோ அவை பயன்படுத்தப்படலாமென அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது.

ஆனால் அந்த வட்டாரத்தில் தைவானிய அரசாங்கமும் வெளிநாட்டுச் சக்திகளும் பிரச்சினை உண்டாக்குவதாகச் சீனத் தற்காப்பு அமைச்சு குறைகூறியுள்ளது.

அமெரிக்கா வட்டாரப் பூசல்களைத் தூண்டிவிடுவதாகக் கூறிய பெய்ச்சிங், மத்திய கிழக்கு வட்டாரத்தில் வாஷிங்டனின் தலையீட்டை அதற்கு ஆதாரங்காட்டியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்