சீன விமான நிறுவனங்கள் வாரம் இருமுறை விமானச் சேவைகளைத் தொடர அமெரிக்கா அனுமதி
சீன விமான நிறுவனங்கள் வாரம் இருமுறை விமானச் சேவைகளைத் தொடர அமெரிக்கா அனுமதி
சீன விமான நிறுவனங்கள் வாரம் இரண்டு முறை விமானச் சேவைகளைத் தொடர அமெரிக்கா அனுமதி வழங்கவுள்ளது.
முன்னர், சீன விமானச் சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படும் என்று வாஷிங்டன் தெரிவித்திருந்தது.
கிருமிப்பரவல் தொடர்பான தடைகள் தளர்த்தப்படுவதால், அமெரிக்க விமானச் சேவைகள் சீனாவில் தொடர பெய்ச்சிங் அனுமதித்துள்ளது.
அங்கு வாரம் ஒருமுறை அமெரிக்க விமானச் சேவைகள் செயல்படும்.
பிற நாடுகள் அங்கு இரு முறை தங்கள் விமானச் சேவைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு எந்தப் பயணிக்கும் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்.