Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வூஹானுக்குச் சென்றுள்ள நிபுணர் குழுவுக்குச் சீனா தகவல்களைத் தர வேண்டும்: அமெரிக்கா

வூஹானுக்குச் சென்றுள்ள நிபுணர் குழுவுக்குச் சீனா தகவல்களைத் தர வேண்டும்: அமெரிக்கா

வாசிப்புநேரம் -
வூஹானுக்குச் சென்றுள்ள நிபுணர் குழுவுக்குச் சீனா தகவல்களைத் தர வேண்டும்: அமெரிக்கா

படம்: AFP

சீனாவின் வூஹான் நகருக்குச் சென்றுள்ள உலகச் சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழுவுக்குச், கிருமித்தொற்று தொடர்பான தகவல் தரவுகளைப் பெற அனுமதி வழங்கப்படவேண்டுமென அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

கிருமித்தொற்று மாதிரிகள், மருத்துவத் தகவல்கள், ஆகியவற்றைக் குழு பெறவும், நேர்காணல்களை நடத்தவும், குழுவினருக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று அமெரிக்கா கோரியது.

அந்தச் செயல்முறைகளுக்குச் சீனா தடையாக இருக்கக்கூடாது என்று, அமெரிக்க சுகாதாரத்துறை இயக்குநர் கெர்ரெட் கிரிக்ஸ்பி (Garrett Grigsby) கூறினார்.

தற்போது வூஹானில் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிபுணர் குழு, காணொளி வழியாகச் சீனத் தொற்றுநோய் நிபுணர்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்