Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவில் வாடிக்கையாளர்களின் விநோதமான கோரிக்கைகளை நிறைவுசெய்யும் உணவு விநியோக ஓட்டுநர்கள்

சீனாவில் வாடிக்கையாளர்கள் வாங்கும் குளிர்பானங்களிலிருந்து விரைவு உணவு வரை வெவ்வேறு உணவுப் பொருட்களை வீடுவீடாகச் சென்று விநியோகிக்கவேண்டும்.

வாசிப்புநேரம் -
சீனாவில் வாடிக்கையாளர்களின் விநோதமான கோரிக்கைகளை நிறைவுசெய்யும் உணவு விநியோக ஓட்டுநர்கள்

(படம்: Mp.weixin.qq.com)

சீனாவில் வாடிக்கையாளர்கள் வாங்கும் குளிர்பானங்களிலிருந்து விரைவு உணவு வரை வெவ்வேறு உணவுப் பொருட்களை வீடுவீடாகச் சென்று விநியோகிக்கவேண்டும்.

ஆனால், உணவு விநியோக ஓட்டுநர்கள் அதற்கு ஒரு படி மேலே சென்று வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்றுகின்றனர்.

வாடிக்கையாளர்களின் விசித்திரமான கோரிக்கைகள் யாவை?

வீட்டுக்குள் வண்டு வந்ததால் அதனை விரட்டுவதற்கு அஞ்சிய ஒருவர், அதனைக் கொல்லுமாறு உணவு விநியோக ஓட்டுநரைக் கேட்டுக்கொண்டார். வண்டைக் கொல்ல அவரும் சம்மதித்தார்.

உணவை விநியோகம் செய்யும்போது பொட்டலத்தின் மேலே புலி ஒன்றின் படத்தை வரையுமாறு மற்றொரு வாடிக்கையாளர் கேட்டுக்கொண்டார்.

அவருடைய வித்தியாசமான கோரிக்கைக்கு இணங்கினார் ஓர் ஓட்டுநர்.

'உணவை விநியோகிக்கும் ஓட்டுநர் அழகாக இருக்கவேண்டும். இல்லையென்றால் பசி பறந்துவிடும்.' என்பது மற்றொரு வாடிக்கையாளரின் விநோதமான கோரிக்கை.

இவ்வாறு சீனாவில் நாள்தோறும் உணவை விநியோகிக்கும் ஓட்டுநர்களுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து விசித்திரமான கோரிக்கைகள் வருகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்