Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கையில்லையென்றாலும், விரைவாக நீந்த முடியும் - ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்ற வீரர்

கைகள் இல்லாமல், உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற சீன வீரர், இணையவாசிகளின் மனங்களையும் வென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
கையில்லையென்றாலும், விரைவாக நீந்த முடியும் - ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்ற வீரர்

(படம்:Reuters/Edgar Su)

கைகள் இல்லாமல், உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற சீன வீரர், இணையவாசிகளின் மனங்களையும் வென்றுள்ளார்.

அது குறித்து BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

30 வயது செங் தாவ் (Zheng Tao), வண்ணத்துப்பூச்சி பாணி, எதேச்சை பாணி, மல்லாந்த நீச்சல், ஆகியவற்றில் முதலிடத்தில் வந்தார்.

அவருடைய அனைத்து வெற்றிகளும் உலகச் சாதனையாகவோ, உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் சாதனையாகவோ அமைந்தன.

புதன்கிழமை 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் அவர் வென்ற பதக்கம், சீன மக்களால் கொண்டாடப்பட்டது.

உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக்கில் சீனா வென்ற 500-ஆவது தங்கப் பதக்கம் அது என்று கூறப்பட்டது.

செங் தாவு, உடலின் மேற்பகுதியில் உள்ள வலிமையைச் சமூக ஊடகவாசிகள் புகழ்ந்தனர்.
அவரைப் பார்த்துப் பெருமிதம் கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நாள்தோறும், 10 கிலோமீட்டர் தூரம் வரை செங், நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டதாக BBC சொன்னது.

எனக்கு கையில்லையென்றாலும், விரைவாக நீந்த முடியும்

என்று தம் மகளுக்கு அனுப்பிய காணொளியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக்கில் இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளார் செங்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்