Images
  • china covid
    (கோப்புப் படம்: AFP/NOEL CELIS)

கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பூசியை ராணுவத்தினர் பயன்படுத்த சீனா அனுமதி

சீன ராணுவம் கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பூசி ஒன்றைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

ராணுவத்தின் ஆய்வுப் பிரிவும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமும்(biotech firm) இணைந்து அந்தத் தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

கொரோனா கிருமித்தொற்றுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் போராடி வருகின்றன.

நோய்த்தொற்றால் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் மாண்டனர்.

இதுவரை 17 உத்தேசத் தடுப்பூசிகளை உலகச் சுகாதார நிறுவனம் அடையாளங்கண்டுள்ளது. அவற்றில் பாதிக்கும் அதிகமானவை சீன நிறுவனங்களில் அல்லது கழகங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.  

Top