Images
  • Chocolate factory
    படம்: AFP 

புகழ்பெற்ற பெல்ஜிய சாக்லேட் தொழிற்சாலையைச் சூழ்ந்தது வெள்ளம்

புகழ்பெற்ற பெல்ஜியம் சாக்லேட் தொழிற்சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Galler தொழிற்சாலை தரம்வாய்ந்த சாக்லேட்டுகளைத் தயாரிக்கிறது.

வெகு தொலைவில் உள்ள ஜப்பானுக்கும், அது சாக்லேட் தயாரித்து அனுப்புகிறது.

சாக்லேட் உலகின் தலைநகராக பெல்ஜியம் கருதப்படுகிறது.

Liege நகருக்கு வெளியே உள்ள Vesdre ஆற்றங்கரையில் தொழிற்சாலை அமைந்துள்ளது.

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், ஆலைக்கு முன்னே உள்ள சுவரின் பகுதி இடிந்து விழுந்துள்ளது.

1976 இலிருந்து செயல்படும் சாக்லெட் தொழிற்சாலை, முன்னெப்போதும் கடுமையான வெள்ளத்தைக் கண்டதில்லை.

கொரோனா கிருமித்தொற்றுக்கு முன்பு, Galler ஆண்டுக்கு 1,700 டன் சாக்லேட்டை உற்பத்தி செய்தது.

அதன் வருவாய் 30 மில்லியன் யூரோவுக்கும் அதிகமாக இருந்தது.


-AFP 

Top