Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமான வகையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பா?

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தை அடுத்து, போயிங் 737 Max ரக விமானங்கள் தொடர்பிலான சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.   

வாசிப்புநேரம் -
விமான வகையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பா?

(படம்: AFP / Joe Raedle)

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தை அடுத்து, போயிங் 737 Max ரக விமானங்கள் தொடர்பிலான சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் விமானப் பயணிகளுக்கு ஏற்படும் பதற்றத்தைத் தணிக்க, பயண நிறுவனங்கள் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அவற்றுள் ஒன்றான, அமெரிக்காவின் மிகப் பெரிய பயண இணையத் தளமான Kayak, வாடிக்கையாளர்கள் தாங்கள் முன்பதிவு செய்யும் விமானச் சேவைகளை, விமான வகையின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதற்கு துணைபுரியத் திட்டமிட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பயணிகள், தங்களுக்கு போயிங் 737 Max ரக விமானச் சேவைகளைப் பயன்படுத்த தயக்கம் இருந்ததாக, சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்ததை அடுத்து, Kayak நிறுவனம் அந்த முயற்சிகளை மேற்கொண்டது.

விமான வகையின் அடிப்படையில் பயணங்களை முன்பதிவு செய்யும் வசதி, இவ்வாரம் முதல் நடப்புக்கு வரும் என்று Kayak நிறுவனம் தெரிவித்தது.

Booking.com, Agoda.com ஆகிய இணையத் தளங்களின் இணை நிறுவனமான Kayak நிறுவனத்தின் இணையத் தளம் வாயிலாக, ஆண்டுதோறு, மில்லியன் கணக்கான பயணிகள் தங்களது விமானச் சேவைகளையும் ஹோட்டல்களையும் முன்பதிவு செய்கின்றனர்.
   

   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்