Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிரைஸ்ட்சர்ச்சில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆடவரைப் பிடித்த அதிகாரிகளுக்குத் துணிச்சல் விருதுகள்

நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரைப் பிடித்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு துணிச்சல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -

நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரைப் பிடித்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு துணிச்சல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் தாக்குதல் நடத்திய ஆடவரைப் பிடித்ததற்காக அந்த விருதுகள் கொடுக்கப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் மாண்டனர்.

தாக்குதல்காரர் மூன்றாவது பள்ளிவாசலுக்குச் செல்லும்போது அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

தாக்குதல் நடத்திய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் (Brenton Tarrant) மீது 92 குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்