Images
  • 2 Malaysians
    (படம்: AFP/Radio New Zealand)

நியூஸிலந்துத் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்களில் 2 மலேசியர், 6 இந்தோனேசியர்கள்


(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நடந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் இருவர் மலேசியர்கள் என, நியூசிலந்துக்கான மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த நபர்களில் ஒருவருடைய நிலைமை, தற்போது சீராக இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா (Saifuddin Abdullah) கூறினார்.

இதற்கிடையே, நியூசிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் நடந்த தாக்குதலை, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர், ரெட்னோ மர்சூடி (Retno Marsudi) வன்மையாகக் கண்டித்துள்ளார்.

முன்னதாக, கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ஆறு இந்தோனேசியர்கள் அங்கு இருந்ததாய்த், திருவாட்டி மர்சூடி கூறியதாக இந்தோனேசிய ஊடகங்கள் கூறின.

Top