Images
  • Christchurch Manifesto
    (படம்:  AFP/Tessa Burrows)

நியூஸிலந்துத் துப்பாக்கிச் சூடு: கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டு, சம்பவத்தை நேரடியாக ஒளிபரப்பிய துப்பாக்கிக்காரர்


(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

நியூஸிலந்துத் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய நபர் இன அடிப்படையிலான கொள்கை விளக்க அறிவிப்பைச் சமூக ஊடகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

சம்பவத்திற்கு முன் அதனை Twitterஇல் பதிவு செய்த அந்த ஆடவர், சம்பவத்தை Facebookஇல் நேரடியாக ஒளிபரப்புச் செய்திருக்கிறார்.

அந்தக் காணொளியைப் பகிர வேண்டாம் என்று நியூஸிலந்துக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களிலிருந்து அதனை முற்றாக அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அது தெரிவித்தது.

அந்தக் காணொளி உண்மையானது என்று AFP செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

கொள்கை விளக்க அறிவிப்பு இன்று (மார்ச் 15) காலை, சம்பவத்திற்கு முன் பதிவு செய்யப்பட்டது.

73 பக்கங்கள் கொண்ட அது 'The Great Replacement' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

ஃபிரான்ஸில் தோன்றிய சிந்தனையின் அடிப்படையில் அறிக்கை எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

அதிகரித்து வரும் குடியேறிகளின் எண்ணிக்கையால் பிரான்ஸ் மக்கள் தங்கள் இருப்பிடத்தை இழந்து வருவதாகவும் அது ஒரு சதித் திட்டம் என்றும் அப்போது கூறப்பட்டது.
 

Top