Images
  • Christchurch Schools
    (படம்: TVNZ/via REUTERS TV)

நியூஸிலந்துத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன


நியூஸிலந்தின், கிரைஸ்ட்சர்ச் நகரில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அங்குள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களையடுத்து, பள்ளிகள் அனைத்தையும் மூடக் காவல்துறை உத்தரவிட்டிருந்தது.

தற்போது, கிரைஸ்ட்சர்ச் நகரம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் பெருமளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக, நியூசிலந்துக் காவல்துறை தமது Twitter பக்கத்தில் தெரிவித்தது.

பொதுமக்களின் பாதுகாப்பே காவல்துறையின் முன்னுரிமை என்று அது அவர்களுக்கு மறுவுறுதி அளித்தது.

மேலும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பான காணொளிகளைப் பகிர்ந்துகொள்வது பற்றியும், காவல்துறை எச்சரித்தது.

பள்ளிவாசல் ஒன்றில், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை, துப்பாக்கிக்காரர் ஒருவர் சுடுகின்ற காணொளி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்தக் காணொளியை, அந்தத் துப்பாக்கிக்காரரே படம்பிடித்ததாக நம்பப்படுகிறது. 

Top