Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்துத் துப்பாக்கிச்சூடு: 49 பேர் மரணம், 20 பேர் படுகாயம்

நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 40 பேர் மாண்டதாக அந்நாட்டுப் பிரதமர் ஜசிந்தா ஆர்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
நியூஸிலந்துத் துப்பாக்கிச்சூடு: 49 பேர் மரணம், 20 பேர் படுகாயம்

(படம்: AFP/Radio New Zealand)


(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 49 பேர் மாண்டதாக அந்நாட்டுப் பிரதமர் ஜசிந்தா ஆர்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் 20 பேர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நியூஸிலந்து, பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிரான ஆக உயரிய விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நால்வரும் தீவிரவாதக் கருத்துகளைக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் காவல்துறையின் கண்காணிப்புப் பட்டியலில் இல்லை என்றும் பிரதமர் ஆர்டன் கூறினார்.

அவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்ட இரு வெடிகுண்டுக் கருவிகளைக் காவல்துறையினர் அகற்றியுள்ளதாகவும் பிரதமர் ஆர்டன் கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்