Images
  • onesie
    (படம்: Bloxwich Fire/Twitter)

கிறிஸ்துமஸ் அலங்காரங்களுக்காக அந்தரத்தில் தொங்கிய பெண்

பண்டிகை காலத்தில் பலரும் வீடுகளை அலங்கரிப்பர்.
சிலர் புதிதாகப் பொருட்களை வாங்குவர். சிலர் கடந்த ஆண்டுகள் பயன்படுத்தியவற்றை மறுபடியும் உபயோகிப்பர். அப்படி தம்மிடம் இருந்த அலங்காரங்களை மீண்டும் பயன்படுத்த நினைத்தார் பிரிட்டிஷ் பெண் ஒருவர்.

அவற்றைப் பத்திரமாக அவர் வீட்டின் இரண்டாம் மாடியில் வைத்திருந்தார்.

அவர் அலங்காரங்களை எடுக்க அங்கு சென்றபோது திடீரென்று தரை உடைந்தது. அதில் கீழே விழுந்த பெண்ணின் இரு மாடிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டன. சுமார் 15 நிமிடத்திற்கு தாமாகவே விடுப்பட முயன்றார் பெண்.


அப்போது வேறொரு அறையில் இருந்த அவர் காதலர், காதலியின் கதறலைக் கேட்டு அறைக்கு வந்தார். உதவிக்குக் கைகொடுக்க வந்தவர்தான். எனினும், கண்ட காட்சி அவரைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைத்திருக்கிறது.

அந்தரத்தில் தொங்கும் காதலியைக் காப்பாற்றுவதற்குப் பதில் முதலில் படங்கள் எடுக்க தொடங்கினார்.

சற்று நேரம் கழித்து தீயணைப்பாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்டார் பரிதாப நிலையில் சிக்கிய பெண். பெண்ணுக்குக் காயங்கள் இல்லை. ஆனால் அதைவிட அவமானம் வலியைக் கொடுத்திருக்கும். தீயணைப்பாளர்கள் இப்படி சிக்கிய பெண்ணை மீட்பது இதுவே முதல்முறை என்றனர். 

Top