Images
  • england covid
    (கோப்புப் படம்: REUTERS/Toby Melville)

இங்கிலாந்தில் அதிரடித் திட்டக் கட்டுப்பாடுகள் தேவை: பிரிட்டிஷ் மருத்துவத்துறைப் பேராசிரியர்

இங்கிலாந்தில் கிருமிப்பரவல் மோசமாக இருக்கும் பகுதிகளில் அதிரடித் திட்டக் கட்டுப்பாடுகள் தேவை என்று COVID-19 பரிசோதனை குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் 2-ஆம் கட்டக் கிருமிப்பரவல் மோசமடைந்து வருகிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசாங்கம், பொருளியல் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

அத்தகைய நடவடிக்கைகளால் அதிகப் பலனில்லை என்று ஆக்ஸ்ஃபர்ட் (Oxford) பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியர் ஜான் பெல் (John Bell) கூறினார்.

'Circuit-breaker' என்கிற குறுகிய கால, கட்டுப்பாடுகள் அதிகம் கொண்ட தேசிய அதிரடி நடவடிக்கை தேவை என அவர் குறிப்பிட்டார்.

அந்த நடவடிக்கையின் கீழ், பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடவேண்டிய நிலை வரலாம் என்றார் அவர்.

சென்ற வாரம் மட்டும், இங்கிலாந்தில் ஒரு நாளைக்குச் சராசரியாக 27,900 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. 

Top