Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Citigroup பன்னாட்டு வங்கி அதன் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை இவ்வாரம் தொடங்கும்

பன்னாட்டு வங்கியான Citigroup அதன் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை இவ்வாரம் தொடங்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
Citigroup பன்னாட்டு வங்கி அதன் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை இவ்வாரம் தொடங்கும்

.(படம்:REUTERS/Chris Helgren)

பன்னாட்டு வங்கியான Citigroup அதன் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை இவ்வாரம் தொடங்கவுள்ளது.

முன்னதாக வங்கி ஆள்குறைப்பு செய்வதைச் சற்று நிறுத்திவைக்கவிருப்பதாக உறுதியளித்திருந்தது.

ஆள்குறைப்பு நடவடிக்கைகளால், அதன் உலகளாவிய ஊழியரணியின் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே பாதிக்கப்படுவர்.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியில், வங்கியில் சுமார் 204,000 ஊழியர்கள் பணிபுரிந்தனர்.

இந்தக் காலாண்டில், வருவாய் இழப்பு, கடன் இழப்புகளுக்காக ஒதுக்கப்படும் இருப்புகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஆகியவற்றை வங்கி எதிர்நோக்கக் கூடும். அதனால், ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாய்க் கூறப்பட்டது.

மேலும், குறையும் வட்டி விகிதங்களையும், வாடிக்கையாளர்களின் செலவினம் குறைந்திருப்பதையும் வங்கி காரணங்களாகச் சுட்டியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்